Skip to main content

Posts

Showing posts with the label தேடல்

யாமத்துக் கைக்கிளை - பாபு

யாமத்துக் கைக்கிளை... விளக்கம் கொடுக்காம போனது என் தப்புதான். ஒருத்தரு என்னடான்னா... சாமத்துல எவனோ வந்து என் சைக்கிளைக் களவான்டுக்கிட்டு போயிட்டானாம்... அதை நெனச்சுப் பொலம்புறேன்னு பொடேர்னு பொடரியில அடிச்சாப்ல சொல்லிட்டுப் போயிட்டாரு.... என்சைக்ளோபீடியான்னா.... என் சைக்கிளைப் பிடிய்யான்னு பதம்பிரிக்குற பயலுவ நம்ம பயலுவதானே.... சரி போகட்டும்... கைக்கிளைன்னா என்னன்னு பாக்குறதுக்கு முன்னாடி திணைன்னா என்னன்னு பாத்துருவோம். திணைன்னா பிரிவுன்னு பொருள். வாழ்க்கையையும் ஒரு பொருளாகப் பாத்தாங்க நம்ம முன்னோர்கள். அதனை ரெண்டு பிரிவா... அதாவது ரெண்டு திணையாப் பாத்தாங்க. 1.  அகத்திணை  - ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்றதைப் பத்தி பேசுவது 2.  புறத்திணை  - அகவாழ்வு தவிர்த்து புறத்தே எல்லோருக்கும் தெரியும் ஒழுக்கத்தைப் பத்தி பேசுறது அகத்திணையைப் பாத்தீங்கன்னா... தொல்காப்பியத்துல 7 திணைகளா பிரிச்சுருக்காரு நம்ம தொல்காப்பியரு. கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப (தொல்காப்பியம், பொருளதிகாரம்-1) அது என்னன்னா... கைக்கிளை (மொதல்ல நம்ம திணை ...

எண்களை எண்ணிப் பார்க்கிறேன் ( Fibonacci Numbers ) - பாபு

எண்களை எண்ணிப் பார்க்கிறேன்... எப்பொழுதிலிருந்து எண்கள் என்னை வசீகரித்தன என்று தெரியவில்லை. ஆனால், இன்னும் எனக்குப் புதிரான ஒன்று என்றால் அது இந்த எண்கள்தான். இன்னமும் அதன் மீதான வியப்பும் ஆச்சர்யமும் எனக்குள்ளே இருக்கின்றன. யார் கண்டு பிடித்திருப்பார்கள் இந்த எண்களை? அல்லது எண்களே தங்களை நமக்குக் காட்டிக் கொண்டனவா? எப்படி அவற்றிற்கான மதிப்புகள் நம் நினைவில் தோன்றின? எங்கே தொடங்குகின்றன? எங்கே முடிகின்றன? அவைகளுக்குள்தான் எத்தனையெத்தனை மர்மங்கள்.... எத்தனையெத்தனை தொடர்புகள்...! எனக்கு எண்களை முதன் முதலில் போதித்தது யார் என்று நினைவில் இல்லை. ஆனால், கணக்குப் போடுவதற்கு ரூபாய் நாணயங்களை வைத்து என் தந்தை சொல்லிக்கொடுத்தது நினைவில் இருக்கின்றது. அதன் பின்னர் இரண்டாம் வகுப்பில் பெருக்கல் வாய்ப்பாடு படித்தது நினைவில் இருக்கின்றது. அப்பொழுதெல்லாம் குருட்டு மனப்பாடம்தான். எல்லோரையும் உட்காரவைத்து... ஒவ்வொருவராக முன்னால் வந்து சத்தம் போட்டு சொல்லவேண்டும். அதனை மற்றவர் திருப்பிச் சொல்லவேண்டும். திரும்பத் திரும்பச் சொல்கையில் அது மனப்பாடம் ஆகிவிடும் என்பது தாத்பர்யம். ஆனால், எனக்கெ...