யாமத்துக் கைக்கிளை...
விளக்கம் கொடுக்காம போனது என் தப்புதான். ஒருத்தரு என்னடான்னா... சாமத்துல எவனோ வந்து என் சைக்கிளைக் களவான்டுக்கிட்டு போயிட்டானாம்... அதை நெனச்சுப் பொலம்புறேன்னு பொடேர்னு பொடரியில அடிச்சாப்ல சொல்லிட்டுப் போயிட்டாரு.... என்சைக்ளோபீடியான்னா.... என் சைக்கிளைப் பிடிய்யான்னு பதம்பிரிக்குற பயலுவ நம்ம பயலுவதானே.... சரி போகட்டும்...
கைக்கிளைன்னா என்னன்னு பாக்குறதுக்கு முன்னாடி திணைன்னா என்னன்னு பாத்துருவோம். திணைன்னா பிரிவுன்னு பொருள். வாழ்க்கையையும் ஒரு பொருளாகப் பாத்தாங்க நம்ம முன்னோர்கள். அதனை ரெண்டு பிரிவா... அதாவது ரெண்டு திணையாப் பாத்தாங்க.
1. அகத்திணை - ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்றதைப் பத்தி பேசுவது
2. புறத்திணை - அகவாழ்வு தவிர்த்து புறத்தே எல்லோருக்கும் தெரியும் ஒழுக்கத்தைப் பத்தி பேசுறது
அகத்திணையைப் பாத்தீங்கன்னா... தொல்காப்பியத்துல 7 திணைகளா பிரிச்சுருக்காரு நம்ம தொல்காப்பியரு.
கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப
(தொல்காப்பியம், பொருளதிகாரம்-1)
அது என்னன்னா...
மொதல்ல நடுவுல இருக்குற அஞ்சு திணையும் என்னன்னு சுருக்கமா சொல்லிருறேன்.
அதாவது ஒரு இளைஞனுக்கும் (என்னைய மாதிரி...) ஒரு இளைஞிக்கும்... (........ இங்க பெண்கள் யாரும் உங்க பேரைப் போட்டுக்கலாம்னு நெனைக்காதீங்க.... கொன்னு.. கொன்னு..) வர்ற... அன்பு... காதல்.. லவ்... பிரனயம்.... ப்ரேம்.... மொஹபத்... பத்தி பாடுறது இந்த அஞ்சு திணைகளுக்குள்ள அடங்கும்.
ரெண்டு பேத்துக்கும் இடையில ஏற்படுற ஊடல், கூடல், சந்தோஷம், துக்கம், சண்டை சச்சரவுன்னு அவங்களைப் பத்தி மட்டுமே சுத்திச் சுத்திப் பாடல்கள் எழுதுவாங்க. பெரும்பாலும் பாத்தீங்கன்னா... ஒரே பொலம்பலாத்தான் இருக்கும். யாருகிட்டயும் சொல்ல முடியாது... ஆனா சொல்லியாகனும். அப்பதான் மனசுல பாரம் கொறைஞ்ச மாதிரி இருக்கும். அதுனால தனக்குத்தானே மனசுக்குள்ள சொல்லிக்குவாங்க. சில சமயத்துல நெருங்கிய ஃப்ரெண்டுகிட்ட, பறவைகள்கிட்ட, மரஞ்செடிகிட்டன்னும் சொல்லிக்குவாங்க.
இதோட இதை நிறுத்திக்கலாம்... ஆனா... நான் யாமம்னு ஒன்னு சேத்துச் சொல்லிருக்கேனே... அதுவும் இதுக்குக் கீழதான் வருது... அதுனால... இன்னும் கொஞ்சம் உங்களை போரடிச்சுக்குறேனே... ப்ளீ...ஸ்....
அந்த அஞ்சு திணையும் அஞ்சு நிலத்தோட (என்னென்ன நிலம்னு கீழ தர்றேன்.) நிலத்தோட தன்மைச் சூழ்நிலையோட சேர்த்து... அதுக்குக் கீழ இன்னும் துறைகள்னும்... முதல், கரு, உரின்னு மூணு ஒழுக்கங்களோட பிரிச்சுப் பாடுவாங்க. ச்சே... என்ன மாதிரியான சமூகங்க அது... சான்சே இல்லை போங்க... அனுபவிச்சு வாழ்ந்துருக்காங்க... நாம இப்ப வெந்ததைத் தின்னுட்டு விதி வந்தா சாவோம்னு கெடக்கோம்.
சரி, அந்த 'முதல்' அப்டீங்குற பொருளைப் பாத்தோம்னா... நிலமும் பொழுதும்னு பிரிச்சு... அந்தப் பொழுதையும் பெரும்பொழுது சிறுபொழுதுன்னு பிரிச்சு மேய்ஞ்சுருப்பாங்க.
இப்ப குறிஞ்சிய மட்டும் எடுத்துக்குவோம். குறிஞ்சிக்கு பெரும்பொழுது கூதிர் காலமும், முன்பனிக்காலமும்... அதாவது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை மாசம். ச்சே... என்னவொரு காம்பினேஷன்...! இந்த ரெண்டு காலத்துலயும்... மலையும் மலை சார்ந்த இடமும் எப்டீ இருக்கும்னு நெனச்சுப் பாருங்க. இப்ப சிறுபொழுதைப் பாருங்க... இங்கதான் யாமம் வருது.... அதாவது ராத்திரி 10 மணியில இருந்து 2 மணி வரைக்கும் இருக்குற பொழுதுதான் யாமங்குறது.
ஒரு நாளைக்கு 6 சிறுபொழுதுகள் வரும்.
காலை - 6-10
நண்பகல் - 10-2
எற்பாடு - 2-6
மாலை - 6-10
யாமம் - 10-2
வைகறை - 2-6
ஆக, குறிஞ்சிக்கு சிறுபொழுது காம்பினேஷன்தான் அந்த யாமம். எனக்கும் இப்ப இந்த மார்கழி மாசத்துல ராத்திரி 10 மணிக்கு மேலதான் சிந்தனை பீறிட்டுக் கிளம்புறதால... இந்த யாமத்தை எடுத்துக்கிட்டேன்.
இப்ப சொல்லாம விட்டுட்டு வந்த அந்த முதலும் கடைசியுமான ரெண்டு திணைக்கு வருவோம். அது கைக்கிளை மற்றும் பெருந்திணை. (கொட்டாவி விடுறவங்க... எந்திரிச்சு ஒரு பத்து தடவை ஜங்கு ஜங்குன்னு குதிங்க... பாக்கலாம்... ஆ..ங்.. அப்டீதான்.. இப்ப கவனிங்க...)
கைக்கிளைங்குறது தலைவன் தலைவி (அதாங்க இளைஞன் இளைஞி..) ரெண்டு பேத்துல யாராச்சும் ஒருத்தர் மட்டும் அடுத்தவரை விரும்புறது. நம்ம இலக்கியத்துல பாத்தீங்கன்னா... பெரும்பாலும்... தலைவன்தான் அப்டீ ஃபீல் பண்ணி பாடியிருப்பான்... (அப்பவும் அவந்தான் பாவம்... தலைவி பிடிகொடுக்கவே மாட்டா போலிருக்கு.)
கை அப்டீன்னா தமிழ்ல சிறுமைன்னு ஒரு அர்த்தமும், ஒருபக்கம் சார்ந்தன்னு ஒரு அர்த்தமும் இருக்கு.கிளை அப்டீன்னா உறவுன்னு அர்த்தம்.
இப்ப சேத்துப் பாருங்க... சிறுமையான உறவுன்னு வருதா? அதாவது அடுத்தவரின் விருப்பம் இல்லாம, அடுத்தவர் விருப்பம் என்னன்னு தெரியாம அவங்களை விரும்புறதுக்குப் பேருதாங்க கைக்கிளை.
இருங்க.. இருங்க... ச்சே... கைக்கிளைன்னு பேரைப் பாக்கும்போது எவ்ளோ ஈர்ப்பா இருந்துச்சு... அர்த்தம் இவ்ளோ மோசமா இருக்கேன்னு நெனச்சுறாதீங்க...
தொல்காப்பியர் என்ன சொல்றார்னா....
காமம் சாலா இளமை யோள்வயின்
ஏமம் சாலா இடும்பை எய்தி
நன்மையும் தீமையும் என்றுஇரு திறத்தான்
தன்னொடும் அவெளாடும் தருக்கிய புணர்த்துச்
சொல்எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்
புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே.
(தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியல் - 53)
காதல் வராத பொண்ணுகிட்ட இவனுக்குக் காதல் வந்து துன்பப் படுறான் நம்ம இளைஞன். அவளைப் பத்தி சில சமயம் நல்லாப் புகழ்ந்து பாராட்டி பாடுவான். சமயத்துல கடுப்பு வந்து நல்லாத் திட்டியும் பாடுவான். ரெண்டு பேத்துக்கும் ஒத்துப்போற குணங்களைச் சொல்லிப் பாடுவான். (ஒத்துப்போகுதோ இல்லையோ... ஒத்துப்போற மாதிரி நெனச்சுப் பாடுவான்.) ஆனா, இதெல்லாம் அவளுக்கும் தெரியாது... வேற யாருக்கும் தெரியாது. தனக்குத் தானே புலம்பிக்குறதுனால... இவன் பேச்சுக்கெல்லாம் பதில் வராது, இருக்காது. இவனே பாடிக்குவான்... இவனே சந்தோசப்பட்டுக்குவான்... அதான்டா கைக்கிளைன்னு பஞ்ச் வைக்கிறாரு நம்ம தொல்காப்பியரு..
ஆனா பாருங்க... கைக்கிளை எப்பயுமே கைக்கிளையாவே இருந்துறாது... ஒருவேளை அந்த இளைஞி இந்த இளைஞனோட ஏக்கத்தை, எதிர்பார்ப்புகளைப் புரிஞ்சுக்கிட்டு, சாரி மச்சான் நான் உன்னையப் புரிஞ்சுக்காம உதாசீனப்படுத்திட்டேன்... இனிமேட்டு இருந்து ஐ லவ் யூ மச்சான்னு... சொன்னா அங்கே ஒரு காதல் பூப்பூக்கும். பாரதிராஜா படத்துல வர்ற மாதிரி வெள்ளையுடை தேவதைகள் லலலா லலலா..ன்னு பாடிக்கிட்டே சுத்தி வருவாங்க... மொழி படத்துல காட்டுற மாதிரி பல்பு எரியும், பூச்சொரியும். திடீர்னு மழை பெய்யும். வெயில்ல குளிரும். எதுக்குன்னே தெரியாம சிரிப்பாங்க ரெண்டு பேரும். (அவங்களைப் பாத்து மத்தவங்க எல்லோரும் சிரிப்பா சிரிப்பாங்க... அது வேற கதை...)
அதுக்கப்புறம் என்ன... இந்த இளைஞன் இளைஞி பிற்பாடு தலைவன் தலைவியா மாறி அடுத்த ஐந்திணை ஒழுக்கத்துக்கு வந்துருவாங்க....
ஆணோட கைக்கிளை ஆண்பாற் கைக்கிளைன்னும்... பெண்ணோட கைக்கிளை பெண்பாற் கைக்கிளைன்னும் பிரிச்சுச் சொல்லுவாங்க. ஆனா, பெண்பாற் கைக்கிளையை இலக்கணப்படுத்தலை. அதுனால அதை அகத்திணையில சேக்காம புறத்திணையில சேத்து விட்டுட்டாங்க... நம்ம புலவர் பெருமக்கள். (நல்லா வேணும்... ஆண்களை அழுக விடுறாங்கள்ல...)
கைக்கிளையோட பாகுபாடுகளா... காட்சி, ஐயம், துணிவு, குறிப்பறிதல்னு... சொல்லுவாங்க... நான் என்னோட யாமத்துக் கைக்கிளையில மொதப் பாகுபாடான காட்சியை மட்டும் கருப்படுத்தியிருப்பேன்... ஐயம் கொள்ள எனக்கு மனசு இடம் தரலை... அதே மாதிரி தலைவியைத் திட்டுறதுக்கும் மனசு வரலை... அதுனால தலைவன் தானே நொந்துக்குறதா மட்டும் எழுதியிருப்பேன்... இன்னும் எழுதனும்னும் நெனச்சுருந்தேன்.... (ஆமா, இறந்தகாலம்தான்... நெனச்சுருந்தேன்... இப்ப கதையில ஒரு ட்விஸ்ட்டு வந்துருச்சு. அதை தனியா சொல்லுறேன்.)
அதுல பாருங்க... நம்ம கதிரொளி ஐயா வந்து பெருந்திணையான்னு படார்னு ஒரு கேள்வியக் கேட்டுட்டுப் போயிட்டாரு... போற போக்குல கேட்டாரா... இல்லை வேணும்னே நறுக்குனு கேட்டாரான்னு தெரியலை. எனக்கே கொஞ்சம் சங்கடமா போயிருச்சு... அப்ப அந்த கதைமாந்தத் தலைவனுக்கு எப்டீ இருந்துருக்கும்....? நல்ல வேளை நான் அவன்கிட்ட சொல்லலை.
இப்ப பெருந்திணைன்னா என்னன்னு சொல்லிர்றேன்... (ஷ்...சூ... எங்க எந்திரிச்சுப் போறீங்க... உக்காருங்க.. இதான் கடைசீ... இத்தோட முடிச்சுக்கலாம்...)
பொருந்தாக் காமத்தைதான் பெருந்திணைன்னு பிரிச்சுருக்காங்க. கைக்கிளை உணர்வு நிலையிலேயே நின்னு போயிரும். ஆனா, பெருந்தினை அது செயலா மாறி செயல்படுத்தப்பட்டுரும். அதான் இழிநிலையாப் போயிரும்.
தொல்காப்பியத்துல,
ஏறிய மடல்திறம் இளமை தீர்திறம்
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே.
(தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியல் - 54)
அப்டீன்னு நாலு விஷயத்தைச் சொல்றாரு நம்ம தொல்காப்பியரு... (இவரு நாலுந்தெரிஞ்சவர்தான் போலருக்கு...)
இப்ப ஒன்னொன்னா என்ன ஏதுன்னு பாப்போம்..
1. மடல்திறம்
நீ இல்லைன்னா நான் செத்துப் போயிருவேன்னு சொல்றது கைக்கிளை... செத்தே போறது பெருந்திணை. செத்துப் போனதும் ஊரு உலகம் என்ன பேசும்...? அவனைக் கேவலமா பேசும்ல... அதே மாதிரிதான் இந்த மடலேறுதலும்.
அந்தப் பொண்ணு ஒத்துக்கலையோ... இல்லை.. அவங்க அப்பா அம்மா ஒத்துக்கலையோ... (அட.. இல்லை அவளோட வீட்டுக்காரந்தான் ஒத்துக்கலையோ...) ஏதோ ஒரு வகையில அவனால அந்தப் பொண்ணை அடைய முடியலைங்குறப்ப ஒடம்பு முழுக்க சாம்பலை (திருநீறுன்னு டீசன்டா சொல்லிக்குறதுன்னாலும் சொல்லிக்கலாம்) பூசிக்கிட்டு, யாருமே சூடாத, சூட வெறுக்குற பூக்களான, பூளைப்பூ, ஆவிரம்பூ, எருக்கம்பூக்களை மாலையாக் கட்டி கழுத்துல போட்டுக்கிட்டு, அவளோட போட்டோவை வச்சுக்கிட்டு, பனைஓலையால செய்யப்பட்ட ஒரு குதிரை மேல ஒக்காந்துக்க... கொஞ்ச பேரு அதை வீதி வீதியா இழுத்துக்கிட்டு போவாங்க.... அப்ப இவன்.. அவ பேரைச் சொல்லி அவளை நான் விரும்புறேன்... ஆனா அவ ஒத்துக்க மாட்டேங்குறா, இன்ன இன்ன காரணத்துனால என்னால அவளை அடைய முடியலைன்னு... புலம்பி ஓலமிட்டுக்கிட்டே போவான்.
இதைப் பாத்து பரிதாபப்பட்டு, அவனோட கஷ்டத்தைப் புரிஞ்சுக்கிட்டு ஊர்க்காரங்க எல்லாம் ஆகவேண்டியதைப் பாத்து, செய்ய வேண்டியதை செஞ்சு அவனையும் அவளையும் சேர்த்துக்கூட வைக்கலாம். அல்லது, அவளே மனசு இரங்கி... இப்டீ நமக்காக தன்னையவே அசிங்கப்படுத்திக்கிறானேன்னு ஒரு பச்சாதாபம் வந்து அவளும் அவனை விரும்பலாம். இல்லை, ஊரு பூரா நம்ம மேட்டரு தெரிஞ்சு போச்சு... இனி ரெண்டு பேத்தையுமே வேற யாரும் கண்ணாலம் கட்டிக்க மாட்டாங்கன்னும்... இவங்க சேர்ந்துக்கலாம்.
ஆனா, என்ன இருந்தாலும்.... இழிநிலை இழிநிலைதான்.
2. இளமை தீர்திறம்
அதாவது காலம் போன காலத்துல வர்ற காதல். மூணு டைப்ல வரும்.1. இவன் அவளை விட வயசுல மூத்தவனா இருப்பான்2. அவள் இவனை விட வயசுல மூத்தவளா இருப்பாள்3. ரெண்டு பேருமே வயசாயிப் போயிருப்பாங்க
இது போகவும், உடல் அமைப்பால் பொருத்தம் இல்லாத ரெண்டு பேத்துக்கு இடையில ஏற்படுற காதலையும் இதுல சொல்லுவாங்க.
3. தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
தேறுதல் ஒழிந்த..ங்குறதைக் கவனிங்க... காமமிகுதியை தேற்றவே முடியாத நெலமை. அறிவு வேலை செய்யாது. இது இலக்கியத்துல பெரும்பாலும் தலைவிக்குதான் சொல்லப்பட்டுருக்கு. தலைவன் ஏதாவது ஒரு காரணத்தால தலைவிய பிரிஞ்சுருப்பான். பொருள் தேடவோ, போருக்கோ அல்லது ஏதாவது ஒரு வேலையாவோ இவளைப் பிரிஞ்சு போயிருப்பான். அப்ப தலைவிக்கு காமமிகுதி ஏற்படும்போது கூட இருக்குற ஃப்ரெண்டு... சரி விடுடீ... எல்லாம் சரியாப் போயிரும், சீக்கிரமே வந்துருவான்னு... ஆறுதல் சொன்னாலும்... தலைவி கேக்க மாட்டா. தன்னோட உணர்வுகளை எல்லோருக்கும் தெரியுறமாதிரி பாடித் தொலைச்சுருவா.
4. மிக்க காமத்து மிடல்
இது ரெண்டு பேத்துக்கும் பொருந்தும். மிகுதியான காமத்தால்... என்ன செய்யுறோம்னு தெரியாம எல்லாத்தையும் செஞ்சுர்றது.
உதாரணமா... ஒரு நல்ல வேளை கிடைச்சுருக்கு... ஆனா அது வெளியூர்லதான் கிடைக்குது. சரி கௌம்புவோம்னு கௌம்புறப்ப தலைவி வந்து ப்ளீஸ் வேணான்டா... கூழோ கஞ்சியோ இங்கனயே குடிச்சுட்டு குடிசையிலேயே இருந்துக்குவோம்னு சொல்லாமயே, இவன் தன்னோட மிக்க காமத்தால போகாம இருந்துர்றது...
தலைவியிடம்... மண்டியிட்டு, கெஞ்சிக் கதறி வேண்டுறது... தலைவியை விடுத்து பரத்தையரைத் தேடிப் போறது... இதெல்லாம் இந்த வகை.
கைக்கிளை சொல்லுறதோட உணர்வு நிலையிலேயே நின்னுரும். பெருந்திணை செயல்ல இறங்கிரும். ஏடாகூடமாப் போயிரும்.
இப்ப சொல்லுங்க கதிரொளி.... நீங்க கேட்டது தப்புதானே...? பெஞ்சு மேல ஏறுங்க.... இனிமே கேக்க மாட்டீங்கதானே...?
ம்..ஹ்...ம் ரெண்டு பேரு கேட்ட கேள்விக்கே... இப்டீன்னா.... இன்னும் நிறையப் பேரு கேட்டீங்கன்னா.... அம்புடுதேன்... இதே மாதிரிதான் ஒக்கார வச்சு... வகுப்பு எடுத்துருவேன்.... ஒச்சரிக்கையா இருங்க.... ச்சே... எச்சரிக்கையா இருங்க....
பின்குறிப்பு :
முன்குறிப்பாவே போட்டுருக்கனும்... ஆனா, இந்த ஃப்ளோ கெட்டுப்போயிரும்னுதான் பின்னாடி பின்குறிப்பாவே சொல்றேன்.... புலவர் பெருநண்பர்கள் நான் சொன்னதுல ஏதாச்சும் தப்பு இருந்துச்சுன்னா... கோச்சுக்காம ஆனா, மறக்காம சுட்டிக்காட்டுங்க.... ஆகா... ஓகோன்னு சொல்றவங்களை விட... அட, லூசுப்பயலே.. இது இப்டீ இருக்கனும்டான்னு இடிச்சுச் சொல்றவங்களைத்தான் நான் அதிகம் கவனிப்பேன்... அவங்கதான் என்னையச் செதுக்குற உளிகள்.
03.01.2014
உன்னையே நினைத்திருக்கும் என் பொழுதுகளில்
என்பெயரையே உச்சரிக்கும் உன் உதடுகள்
நேற்றைய பொழுதொன்றில் வேறோர் பெயர்
சொல்லக் கேட்டுஅப்போது அழுதேன்....
02.01.2014
அதிகம் சந்தித்ததில்லை
தூரத்து நிலவாகவே நீ
ஆயினும் ப்ரியம் ஒன்றே ஈர்ப்பாய்
காலமும் ஞாலமும் அதை ஊடறுக்க
நீயும் மெளனமாய் வாளாதிருக்க
அப்போது அழுதேன்....
02.01.2014
கரும்பென உனை நினைத்தே
உருவொன்று படைத்திருந்தேன்
இரும்பாய் இருந்திட்ட உன் மனதில்
சிறுபொய்க்கேனும் இடமில்லையெனக் கண்டு
அப்போது அழுதேன்....
02.01.2014
சிரித்துப் பேசி சிந்தை கலைத்தே போனாய்
மயக்கிப் பேசி மனதெடுத்தே போனாய்
சிறுபொய்யேனும் சொல்லக் கேட்டு மறுத்து
உயிரை எடுத்துச் செல்லாது போனாயே
அப்போது அழுதேன்....
02.01.2014
ஒற்றைச் சிரிப்பும் அற்றைப் பேச்சும் பிச்சை வேண்டி நின்றபோதல்ல
எற்றை நினைவும் கற்றைப் பேச்சும் எனக்கல்ல என்று அறிந்ததும்
அப்பொழுது அழுதேன்....
01.01.2014
சிலிர்க்கும் கண்கள் தாண்டி
சிதறும் அவள் சிரிப்பு தாண்டி
சின்னஞ் சிறு இதயம் எட்டிப் பார்த்து
எங்கு தேடியும் நான் இல்லை என்று
அப்போது அழுதேன்....
01.01.2014
பரந்த உலகம் காட்டும் பனித்துளி
பகலவன் கண் பட்டு மறைவது போலே
உன் மனதில் என் நினைவுகள் கலைக்கப் பட்டது கண்டு
அப்பொழுது அழுதேன்....
01.01.2014
மாசிலள் நீ நானோ மாசுளனானேன்
ஆசுகொண்ட ப்ரியம் வீசுமிடத்து வீணாக
பேசமறுத்துப் போனாய் - ப்ரியம் கொண்ட
நேசம் கலைத்து யானும் கைக்கிளை
பேசத் துணிகிறேன்...
வருட இறுதியில் ப்ரியம் மறுதலிக்கப்படுகிறதன் விளைவு...கைக்கிளை வரிகளும்... பின் கையறுநிலையும்...
பரந்த வானம். அதனைப் போன்றே மனமும் வெறுமை. சுற்றித் திரியும் ஒற்றைப் பறவையாய் மனது. களைக்கும் வரைக்கும் சிறகசைத்துத் தோற்று கீழ்நோக்கி வீழ்கின்றது. மறுதலிக்கப்பட்ட ப்ரியத்தின் தாங்கவொன்னா ரணம் அதன் வேகத்தை அதிகரிக்கின்றது. விரைந்து தரையை முட்டிவிடவேண்டும் என்று நினைக்கின்றது. எல்லாவற்றையும் ஒரு நிகழ்வுக்குள் முடித்துவிடவேண்டும் என்று பரபரக்கின்றது.
அதற்குள்... அந்தக் குறுகிய மணித்துளிகளுக்குள் கிளைத்தவைகள்தான்... இனி வரும் யாமத்துக் கைக்கிளை....
31.12.2013

- கைக்கிளை (மொதல்ல நம்ம திணை வந்துருச்சா...)
- முல்லை
- குறிஞ்சி
- மருதம்
- நெய்தல்
- பாலை, அப்புறம் கடைசீல
- பெருந்திணை

- குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும்
- முல்லை - காடும் காடு சார்ந்த இடமும்
- மருதம் - வயலும் வயல் சார்ந்த இடமும்
- நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடமும்
- பாலை - மேல சொன்ன நாலு நிலமும் தன்னோட இயல்புல மாறிப் போயி பொட்டைக்காடா இருக்குறது.

- மடலேறுதல்
- இளமை தீர்திறம்
- தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
- மிக்க காமத்து மிடல்